உலக உளநல தினத்தினை முன்னிட்டு உளநல உதவி நிலையத்தினால் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் தற்கொலையை தவிர்த்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் தற்கொலை தவிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு நாடகம் இடம்பெற்றது. நிகழ்வின் வளவாளராக அருட்தந்தை போல் சற்குணநாயகம் கலந்துகொண்டார்.
மேற்படி நிகழ்வில் கன்னன்குடா மகா வித்தியாலய அதிபர் புலேந்திரன், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் தொழில் வழிகாட்டல்அதிகாரியான ஆசிரியர் எம்.குணரெத்தினம், மண்முனை மேற்கு பிரதேச செயலக உள நல உதவியாளர் சி .சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments: