ஓட ஓட விரட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ் பெண் - கணவனின் வெறிச் செயல்
இரத்தினபுரியில் தேயிலை வெட்டும் கத்தியால் தனது மனைவியின் கழுத்தை கணவன் வெட்டி கொலை செய்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் முறையற்ற உறவின் காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் 52 வயதுடைய பரமசிவம் காளியம்மா எனும் மூன்று பிள்ளைகளின் தாய் ஆகும். அவர் இரத்தினபுரி, தெல்வல பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரின் கணவன் தேயிலை இலை வெட்டும் கத்தியுடன் வந்து வெட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பெண் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கு சுமார் 100 மீட்டர் தூரம் ஓடிய போதிலும் காப்பாற்ற முடியாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சந்தேக நபர் தற்போது தனது மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபரைக் கைது செய்ய விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
8/08/2025 11:28:00 AM
Home
/
Unlabelled
/
ஓட ஓட விரட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ் பெண் -இரத்தினபுரியில் கணவனின் வெறிச் செயல்
ஓட ஓட விரட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ் பெண் -இரத்தினபுரியில் கணவனின் வெறிச் செயல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: