News Just In

3/01/2026 06:46:00 AM

ஸ்ரீ மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவராக மூன்றாவது முறையாகவும் ஜெயசிறில் தெரிவு

ஸ்ரீ மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவராக மூன்றாவது முறையாகவும் ஜெயசிறில் தெரிவு


நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டத்தில் தேசத்து ஆலயமாகப் போற்றப்படும் மாட்டுப்பளை ஸ்ரீ மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவராக மூன்றாவது முறையாகவும் காரைதீவு பிரதேச சபை முன்னாள் தலைவரும், தற்போதைய உறுப்பினருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மீனாட்சியம்மன் அருளாசியுடன், பிரதம குரு சண்முக மகேஸ்வர குருக்கள் மற்றும் கோவர்த்தன சர்மா குருக்கள் ஆகியோர் வழிகாட்டலின் கீழ் இந்த தெரிவு இடம்பெற்றது. இந்த தெரிவுக்கு அம்பாறை மாவட்ட ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள், பல்வேறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட மற்றும் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர்கள், ஆலய நிர்வாகத்தினர், ஆலோசகர்கள், கணக்காய்வாளர்கள், பொதுநலன் விரும்பிகள், தனவந்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஆதரவு வழங்கியுள்ளனர்.

மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றுள்ள தலைவர், தமக்கு நம்பிக்கை வைத்து மீண்டும் இந்தப் பொறுப்பை வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். மேலும், ஆலயத்தின் சிறப்பையும், கலை மற்றும் கலாச்சார பாரம்பரியங்களையும் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும், தமக்கு வழங்கப்பட்ட நம்பிக்கைக்கு உரியவராக நடந்து கொள்வதாகவும் உறுதியளித்தார்.

No comments: