News Just In

4/10/2026 06:59:00 AM

பிள்ளையானுக்கு தெரிந்த பயங்கர தகவல் - சுரேஷ் சாலேவால் பதறும் சரத் வீரசேகர

பிள்ளையானுக்கு தெரிந்த பயங்கர தகவல் - சுரேஷ் சாலேவால் பதறும் சரத் வீரசேகர


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் புதிய பல தகவல்களை அம்பலப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், முன்னாள் புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி சுரேஷ் சாலேவின் கைது மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியாகியுள்ள தகவல்கள் இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (சிவனேசதுரை சந்திரகாந்தன்) வசம் உள்ளதாகக் கூறப்படும் சில "மறைக்கப்பட்ட உண்மைகள்" குறித்து தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான புதிய விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமுடன் சுரேஷ் சாலே தொடர்பில் இருந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

No comments: