News Just In

8/13/2025 04:14:00 PM

இனிய பாரதியின் முக்கிய சகா ஒருவர் கொழும்பில் கைது!

இனிய பாரதியின் முக்கிய சகா ஒருவர் கொழும்பில் கைது


கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளில் ஒருவருமான இனிய பாரதியின் முக்கிய சகா ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு படுகொலைகள், கடத்தல்கள் மற்றும் கப்பம் கோரல் சம்பவம் தொடர்பாக இனிய பாரதி என்றழைக்கப்படும் கந்தையா புஷ்பராஜா தற்போதைக்கு குற்றப் புலனாய்வுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இனிய பாரதி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அவரது முக்கிய சகா ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போதைக்கு கைது செய்யப்பட்டுள்ள நபர், இனிய பாரதி மேற்கொண்ட படுகொலைகளின் துப்பாக்கிதாரியாக இருந்துள்ளதுடன், பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுத் துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments: