News Just In

3/07/2026 12:13:00 PM

SAFE நிறுவனத்தால் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான உலர்உணவு பொதிகள் வழங்கிவைப்பு!

SAFE நிறுவனத்தால் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும்
தாய்மார்களுக்கான உலர்உணவு பொதிகள் வழங்கிவைப்பு!



ஆரையம்பதி வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பாலூட்டும்
மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்குபோஷாக்கான உலர்உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்றுகாலை ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில்நடைபெற்றது.

இனம் காணப்பட்ட 34 தாய்மார்களுக்கு மேற்படி பொதிகள்வழங்கி வைக்கப்பட்டது.கிழக்கு -குமுகாய மேம்பாட்டுமன்றம்(SAFE )நிறுவனத்தின் சார்பாக அமைப்பின்உறுப்பினர் திரு கி.சேயோன்,அலுவலக சுகாதார பரிசோதகர் மற்றும் குடும்ப நல தாதியர்களும் பங்கு கொண்டனர்.

இதற்கான நிதி உதவியினை கனடா ரொரன்டோ மாநிலத்தைச் சேர்ந்த
அன்பர்கள் வழங்கியிருந்தனர்

No comments: