எனவே தற்போது வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குள் காணப்படும் மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவினை பிறப்பிடமாகக்கொண்டு தற்போது வேறு மாவட்டங்களிலும் தொழில் நிமிர்த்தம் பணிபுரிபவர்கள் தமது விபரங்களையும், கடவுச்சீட்டு அளவு நிழற்படங்களை எதிர்வரும் 2020.09.21 ம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கக்கூடியதாக பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், வாழைச்சேனை எனும் முகவரிக்கு அனுப்பி வைப்பதுடன் 2020.09.22 ம் திகதி பிரதேச செயலகத்தில் நடைபெறும் கலைஞர்களுக்கான அமர்விலும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்வதுடன் மறைந்த கலைஞர்களின் விபரங்களையும் அவர்களின் புகைப்படங்களினை உறவினர்கள் கையளிப்பது மிகச்சிறப்பான விடயமாக கருதப்படும்.
இதை விட வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவின் பாடசாலைகளில் தொழில்புரியும் இதே பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நடன, இசை, நாடக அரங்கியல் ஆசிரியர்களும் உள்ளடக்கப்படுவார்கள். கலைஞர்களின் விபரம் கீழ்வருமாறு வகைப்படுத்தப்படும்.
01. ஆய்வு
02. ஆக்க இலக்கியம்
03. நாடகத்துறை
04. கூத்து
05. இசை
06. வாத்தியம்
07. நடனம்
08. ஓவியம்
09. சிற்பம்
10. ஊடகம்
11. சித்த வைத்தியம்
12. சினிமா
13. சிலம்பு
14. யோகா
15. கதாப்பிரசங்கம்
16. குறும்திரைப்படம்
17. பட்டிமன்றம்
18. புகைப்படக்கலை
19. வெளியீட்டாளர்கள்
மேலும் மேற்குறிப்பிட்ட துறைகளில் மாவட்ட, மாகாண, தேசியமட்டங்களில் சாதனை புரிந்தவர்களும் உள்ளடக்கப்படுவார்கள்.
மேலதிக தொடர்புகளுக்கு...
திருமதி.டுகேந்தினி சிறிஸ்கந்தராஜா (கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்- 0777112374)
திரு.நே.பிருந்தாபன் (இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்) 0772326183
திரு.கே.எஸ்.ஆர்.சிவகுமார் (கலாசார உத்தியோகத்தர்) 0777167366
திரு.கே.எஸ்.ஆர்.சிவகுமார் (கலாசார உத்தியோகத்தர்) 0777167366

No comments: