
தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிலேயே இன்று (21) காலை இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ தொடர்ந்து பரவி வருவதாகவும், தீயை அணைக்க கோட்டை மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தீயை அணைப்பதற்காக, கோட்டே மற்றும் தெஹிவளை மாநகர சபைகளிலிருந்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தொழிற்சாலையிலிருந்து 5 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் இளம் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (21) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அந்நேரத்தில் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு இருந்துள்ளதாகவும், ஏனையவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்
No comments: