பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் மட்டக்களப்பு விஜயத்தை முன்னிட்டு, செம்மணி, முல்லைத்தீவு மற்றும் சட்ட விரோத சமூக செயற்பாடுகளுக்கு நீதி கோரும் அகிம்சை வழி கவன ஈர்ப்பு போராட்டம் தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் ஒழுங்குபடுத்தப்பட்டு இன்றைய தினம் காந்திப் பூங்காவில் இடம்பெற்றது. இதன் போது பலர் கலந்து கொண்டதுடன் ஆதரவையும் அளித்தனர். அதன்போது இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது.வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னாம் முடிவுக்கு வரவேண்டும்...! வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நிலவும் இராணுவ பிரசன்னத்திற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை வடக்கு மற்றும் கிழக்கில் பூரண ஹர்த்தால் ஆனது பொது மக்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படவுள்ளது.
பலரது வேண்டுகோளுக்கிணங்க இவ் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த ஹர்த்தாலானது திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
No comments: