கோட்டாபய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் நீதியான விசாரணைகளை மேற்கொண்ட பலர் மீது பயணத்தடைகளை விதித்தனர்.
ஆனாலும் புலனாய்வுத்துறையில் முக்கிய அதிகாரியாக இருந்த நிசாந்த டி சில்வா சுவீட்சர்லாந்திற்கு தப்பி சென்று அரசியல் புகலிடம் கோரினார்.
ஆனால் தப்பிச்செல்ல முடியாத ஷானி அபேசேகர 11 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
தென்னிலங்கையில் பல சட்டத்தரணிகள் இருந்தநிலையிலும் ஷானி அபேசேகரவின் விடுதலைக்காக போராடியது ஒரு தமிழ் பெண்தான்.
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவின் துணைவியார் கெளரி சங்கரி தவராசா ஷானி அபேசேகர சார்பில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
No comments: