News Just In

8/10/2025 06:27:00 AM

பிள்ளையானின் கடிதத்தால் திணறும் புலனாய்வு அதிகாரிகள் - விசாரணை தீவிரம்

பிள்ளையானின் கடிதத்தால் திணறும் புலனாய்வு அதிகாரிகள் - விசாரணை தீவிரம்



பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கக்கூடிய பிள்ளையான் தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன் கடிதம் ஒன்று வெளியாகியிருந்தது.

குறித்த கடிதத்தில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கு, புனர் நிர்மானிக்கப்பட்ட பொது நூலகத்தை திறந்து மக்கள் பாவனைக்கு விடுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆகவே இந்த விவகாரம் குறித்து (7) மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த கடிதமானது எவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையானிடம் இருந்து வெளியே சென்றது என்பது தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கபப்ட்டு வருகின்றது

No comments: