இந்திய சுற்றுலா பிரதிநிதிகள் அமைப்பின் வருடாந்த மாநாடு இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரை இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. மாநாட்டிற்காக கைத்தொழில் துறையைச் சேர்ந்தோர் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் அடங்கலாக 400 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், இலங்கை சுற்றுலாத்துறை எதிர்கொண்ட பின்னடைவில் இருந்து மீண்டெழுவதை நோக்காக கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். அமைச்சரின் அழைப்பிற்கு அமைய மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும்.
No comments: