முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் ஞாயிற்றுக்கிழமை (20) அடையாளம் காணப்பட்டுள்ளன.
தனியார் ஒருவரின் காணியில் இருந்து மண் அகழப்பட்டபோதே குறித்த மனித எலும்பு எச்சங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தினை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று இடங்களை அடையாளப்படுத்தியுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள எலும்பு எச்சங்களை மீட்பதற்கு இன்று திங்கட்கிழமை (21) நீதிமன்ற உத்தரவினைப் பெற்று நீதிபதி மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து குறித்த மனித எச்சங்களை மீட்கவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments: