
எதிர்வரும் வெள்ளிக்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கர்த்தால் தேவையற்ற ஒன்று மக்களால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட அரசியல் லாபம் தேடுவோரால் பூரணகடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார்
எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை தமிழ் அரசுக்கட்சியினால் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனிடம் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
நேற்று முன்தினம் முல்லைத்தீவுமாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் இளைஞர் ஒருவர் ராணுவத்தினரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற சந்தேகத்தில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ராணுவத்தினர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்
எமது அரசாங்கமானது சட்டம் ஒழுங்கினைசரியாக நிலைநாட்டி வருகின்றது குறிப்பாக சட்டம் என்பது அனைவருக்கும் சமமான ஒன்று.
இந்நிலையில் சில அரசியல் லாபம் தேடுபவரால் வட கிழக்கில் பூரண கத வடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எதற்கெல்லாம் கர்த்தால் செய்வது என தேட வேண்டிய நிலை காணப்படுகின்றது
குறிப்பாக சில அரசியல் வாதிகள்தெற்கில் ஒரு நிலைப்பாட்டினையும் வடக்கில் வேறு நிலைப்பாட்டினையும் கொண்டுள்ளார்கள் மக்களை ஏமாற்றும் முகமாக மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் முகமாக இவ்வாறான தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்
இவர்கள் ஏற்கனவே தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் தங்களுடைய அரசியல் லாபங்களுக்காக கர்த்தால் அறிவிப்புகளை விடுத்து வர்த்தகர்களை பொதுமக்களை பொருளாதார ரீதியில் பாதிப்படைய செய்ய உள்ளார்கள்
எனவே மக்கள் இந்த விடயம் தொடர்பில் விழிப்பாக செயற்பட வேண்டும் குறிப்பாக கர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தோர் தங்களுடைய பிள்ளைகளை யாழ்ப்பாணத்தில் கல்வி கற்க அனுமதிப்பார்களா அல்லது தங்களுடைய பேரப்பிள்ளைகளை யாழ்ப்பாணத்தில் கல்வி கற்க அனுமதிப்பார்களா இல்லை தானே எனவே தங்களுடைய அரசியல் லாபத்திற்காக மக்களை ஏமாற்றம் செயற்பாட்டில் சில அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளதை நாங்கள் கண்டிக்க வேண்டியுள்ளது
கர்த்தால் அழைப்புதேவையற்ற ஒன்று குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.
No comments: