News Just In

8/13/2025 09:52:00 AM

வீட்டுக்கு தற்காலிக மின் இணைப்பை பெற முற்பட்ட முதியவர்; இறுதியில் நடந்த சோகம்

வீட்டுக்கு தற்காலிக மின் இணைப்பை பெற முற்பட்ட முதியவர்; இறுதியில் நடந்த சோகம்




மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்பங்கேணி கிராமத்தில் மின்சாரக் கம்பியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கியதில் 70 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது போரதீவுப்பற் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 70வயதான தங்கராசா - சுந்தரராசி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.




வீட்டுக்கு தற்காலிக மின்சார இணைப்பை பெற முற்பட்டபோது இவ்வாறு மின்சாரம் தாக்கியதாகவும், பின்னர் மின்சாரம் தாக்கியவரை அயலவர்களின் உதவியுடன் பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் சிகிச்சைப் பலனின்று உயிரிழந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments: