News Just In

10/20/2019 04:24:00 PM

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு எதிர்வரும் 23 ஆம் திகதி தமது இறுதி அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளது.

ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து சபாநாகர் நியமித்த விசேட தெரிவுக்குழு கடந்த மே மாதம் 23 ஆம் திகதியில் இருந்து தமது விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த நிலையில் அவர்களின் அறிக்கை தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளிகள், பொறுப்புக்கூறவேண்டிய அதிகாரிகள், தவறவிடப்பட்ட இடங்கள், தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடிகள், இன்னொரு தவறு இடம்பெறாதிருக்க செய்யவேண்டிய நடவடிக்கைகள் உள்ளடங்கலான பரிந்துரைகளை தெரிவுக்குழு தயாரித்துள்ளது. 

ஜனாதிபதி நியமித்த மூவர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் தெரிவுக்குழுவிற்கு கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அறிக்கையின் பரிந்துரைகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் , இறுதி அறிக்கையில் அவை உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் சுட்டிக்கட்டியுள்ளனர்.

No comments: