நாட்டில் நிலவும் காலநிலை காரணமாக இன்று யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதி பனி மூட்டத்தினால் மறைந்து போயுள்ளது. யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதியின் வவுனியா, ஓமந்தை, புளியங்குளம், இரட்டை பெரியகுளம் ஆகிய பிரதேசங்களில் கடும் பனி மூட்டம் நிலவியுள்ளது.
பனி மூட்டம் காரணமாக வாகன போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக சாரதிகள் தெரிவித்துள்ளனர். காலை நேரத்தில் கடுமையான பனி மூட்டம் நிலைமை காணப்படுகின்றமையினால் யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் பயணிப்போர் அவதான வாகனங்களை செலுத்துமாறு வவுனியா பொலிஸ போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.
No comments: