தற்போது நிலவுகின்ற மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வருடம் ஆகஸ்ற் மாதம் 9,459 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.
ஒக்டோபர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4,155 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த வருடம் 51 ஆயிரத்து 659 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 55 ஆயிரத்து 894 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந் நிலையில், டெங்கு நோய் நுளம்புகள் பெருகுவதை தவிர்ப்பதற்கான நடவக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
No comments: