News Just In

8/16/2025 10:17:00 AM

பிள்ளையானை கும்பலோடு அழிக்க நடவடிக்கை - தொடர்ந்தும் சிக்கும் ஆபத்தானவர்கள்

பிள்ளையானை கும்பலோடு அழிக்க  நடவடிக்கை - தொடர்ந்தும் சிக்கும் ஆபத்தானவர்கள்




கடந்த மகிந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் அவரின் கும்பலை முழுமையாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கிழக்கு மாகாணத்தில் கடத்தல்கள், காணாமல் போதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிள்ளையானின் கீழ் பணியாற்றிய ஆயுததாரிகள் செய்யப்படவுள்ளனர்.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பிள்ளையான் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி என்ற புஷ்பகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நடத்திய நீண்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைதுகள் இடம்பெறவுள்ளன.

கடந்த வாரம் மட்டக்களப்பு மற்றும் கொழும்பின் கெசல்வத்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் 2 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

2007-2008 காலகட்டத்தில் பிள்ளையானின் தலைமையிலான ஆயுதக் குழு, கிழக்கு மாகாணத்தில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் ஏராளமான கொலைகள், கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்களைச் செய்ததாக குற்றச்சாட்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



கடந்த ஆட்சியின் போது அரசாங்கத்தின் ஆதரவுடன் பிள்ளையான் கும்பல் பல்வேறு கொலைகள் மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: