News Just In

8/14/2025 06:43:00 PM

இலங்கைக்கு வரும் அசாத் மௌலானா.. முன்னெடுக்கப்படும் தீவிர நடவடிக்கைகள்

இலங்கைக்கு வரும் அசாத் மௌலானா.. முன்னெடுக்கப்படும் தீவிர நடவடிக்கைகள்



2019 - உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த செனல் 4 ஆவணப்படத்தில் இடம்பெற்ற முக்கியமானவரான அசாத் மௌலானாவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் அவர், இதுபோன்ற ஒரு முக்கியமான கட்டத்தில், எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகராவுக்கு எதிராக நாடாளுமன்ற சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்திருப்பது ஏமாற்றத்தை தருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் எதிர்க்கட்சி குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுவதாக அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போதும் அதற்குப் பின்னரும் ஆட்சியில் இருந்த ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் அப்போது அருணா ஜெயசேகர மீது எந்த விசாரணையும் நடத்தவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: