
பாகிஸ்தான் ராணுவத்தில் ஏவுகணை படை உருவாக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தில் ஏவுகணை பிரிவு
பாகிஸ்தான் தனது 78 வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், பாக்கிஸ்தான் ராணுவத்தில் புதிதாக ஏவுகணை பிரிவு(ARFC) உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் அறிவித்துள்ளார்.
மேலும், இது நவீன தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டிருக்கும் என்றும், ராணுவத்தின் போர் திறனை மேம்படுத்துவதில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது.

இதில், இந்தியாவின் போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 3 நாட்களுக்கு மோதல் நடைபெற்றது. பின்னர் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த போரில், ஏவுகணைகள் மற்றும் விமானங்களே முக்கிய பங்கு வகித்தன.
வான் படையில், இந்தியா ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்போது ராணுவ சமநிலையை பேண இந்தியாவும் ராணுவ பிரிவை உருவாக்க வேண்டுமென ராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சீனா, ரஷ்யா, வடகொரியா போன்ற நாடுகளில் ஏற்கனவே பிரத்தியேக ஏவுகணை பிரிவு உள்ளது. தற்போது பாகிஸ்தானும் அந்த கௌரவத்தை பெற்றுள்ளது.
மேலும், சீனாவின் ஏவுகணை பிரிவான PLARF மிடமிருந்து, சிறப்பு பயிற்சி, தளவாட ஒருங்கிணைப்பு ஆகியவற்றை ARFC பெறும்.
"இது இந்தியாவிற்கானது என்பது தெளிவாக தெரிகிறது" என பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
No comments: