News Just In

8/14/2025 06:49:00 PM

பாதாள உலகக் குழுக்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள்; அவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை- புதிய பொலிஸ்மா அதிபர்

பாதாள உலகக் குழுக்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள்; அவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை- புதிய பொலிஸ்மா அதிபர்!



புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்றையதினம் பொலிஸ் தலைமையகத்தில் வைத்து தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

37ஆவது பொலிஸ்மா அதிபராக அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஆதரவு வழங்கிய அரசியல்வாதிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments: