மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியிலுள்ள ரிதிதென்னை பகுதியில் சனிக்கிழமை (19) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய தெரிவித்தார்.
வெலிக்கந்தை கறுப்பளை முத்துகல்லைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் சுப்பிரமணியம் நகுலேஸ்வரன் (56 வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள தமது மனைவி மற்றும் பிள்ளைகளை பார்வையிடச் சென்ற போது வாழைச்சேனையில் இருந்து பதுளை நோக்கி சென்ற வேன் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபரை மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உடற்கூற்று ஆய்வின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
No comments: