மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், ஆரையம்பதி செல்வாநகர் மயானக்காணி தொடர்பான பிரச்சினை முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டது.
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், குறித்த ஆரையம்பதி மயானக்காணிக்கு மின்சார இணைப்புகள் வழங்கப்படுவதும், அத்துமீறி அடைக்கப்பட்ட காணிகளில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதும் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சுட்டிக்காட்டினார்.
எனவே, நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள குறித்த காணியில் இடம்பெறும் அத்துமீறிய கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துவதுடன், நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் வரையில் எந்தவொரு புதிய கட்டுமானப் பணிகளும் முன்னெடுக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஆரையம்பதியை நகரமாக்கும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக, சிறுகைத்தொழில் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதியை பிரதேச சபைக்கு வழங்கி, அக்காணியில் கடைத்தொகுதி ஒன்றை அமைப்பது தொடர்பாக கடந்த கூட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்தது.
எனினும், குறித்த காணியை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்காணியைப் பெற்றுக்கொள்வது தொடர்பான பிரச்சினையை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைத்து, அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
அதேவேளை, தமிழர்களின் வரலாறுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
உலகநாச்சியார் கோவில் தொடர்பான அகழ்வாராய்ச்சிகளை முன்னெடுப்பதற்கு முன்னர், அப்பகுதியின் வரலாற்றுத் தகவல்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, ஹேமமாலா தொடர்பான வரலாற்றுத் தகவல்களும் மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவை உலகநாச்சியாரின் வரலாற்றுடன் தொடர்புடையதாகக் கூறப்படுவதால், குறித்த வரலாற்றுத் தகவல்கள் மற்றும் ஆதாரங்களை விரிவாக மீளாய்வு செய்த பின்னரே அகழ்வாராய்ச்சிப் பணிகளை முன்னெடுப்பது பொருத்தமானது என அவர் தெரிவித்தார்.
மேலும், ஆயுர்வேத வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை, மட்டக்களப்பு கல்வியற் கல்லூரியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (Wastewater Treatment Plant) தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில், உரிய முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக, கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி, பொதுப் போக்குவரத்து, பேருந்து சேவைகள், காணி விவகாரங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
“மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கூட்டங்களில் பதிவு செய்வதுடன் நின்றுவிடாமல், அவற்றுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம்” என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், வைத்தியர் இ. சிறிநாத், மண்முனைப்பற்று பிரதேச சபையின் உதவித் தவிசாளர் மு. முத்துக்குமார், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

No comments: