News Just In

9/04/2026 10:26:00 AM

சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நாமல்! குவிந்துள்ள ஆதரவாளர்கள்

சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நாமல்! குவிந்துள்ள ஆதரவாளர்கள்


சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் முன்னிலையாகியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை ( 4) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி தெரிவித்துள்ளார்.

இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே தனது கட்சிக்காரர் இந்த கோரிக்கைக்கு இணங்க ஒப்புக்கொண்டதாக சட்டத்தரணி உறுதிபடுத்தியுள்ளார்.

இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவான அரசியல்வாதிகள், பொதுமக்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலர் தற்போது ஆணைக்குழுவின் முன்னிலையில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக பெரிய ரக விமானக்குழுமத்தை அமைப்பது மற்றும் எயார்பஸ் (Airbus) விமானக்கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நாமல் ராஜபக்சவுக்கு ஆணைக்குழு (CIABOC) அழைப்பாணை விடுத்துள்ளது

No comments: