News Just In

8/16/2026 02:19:00 PM

கிழக்குப்பல்கலைக்கழக கலை கலாசாரா பீடத்தின் எட்டாவது வருடாந்த ஆய்வு மாநாடு செவ்வாய்க்கிழமை

கிழக்குப்பல்கலைக்கழக கலை கலாசாரா பீடத்தின் எட்டாவது வருடாந்த ஆய்வு மாநாடு செவ்வாய்க்கிழமை



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

இலங்கை கிழக்குப்பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடம் நடத்தும் எட்டாவது வருடாந்த ஆய்வு மாநாடு செவ்வாய்க்கிழமை 18.08.2026 மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

'புவியியலும் சூழலியலும்”, 'சமூகவியலும் மானுடவியலும்”, 'பன்மைத்துவச் சமூகங்களின் அடையாளங்களும் சமூக நல்லிணக்கமும்” “இலக்கியமும் சமூகமும்”, 'கல்வியும் கற்றல் கற்பித்தல் செயல்முறைகளும்”, 'அரசியலும் மனித உரிமைகளும்”, 'கலையாற்றுகைகளும் அதன் கட்டுருவாக்கங்களும்”, 'சமயங்களும் அறமும்”, 'வரலாறும் வாய்மொழி மரபுகளும்”, 'உளநலமும் பெண்கள் கற்கையும்” ஆகிய பத்துத் தலைப்புகளின் கீழ் மொத்தம் 62 ஆய்வுக் கட்டுரைகள் இம்மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

பேராசிரியர் என். புஸ்பராசா வின் இணைப்பாக்கத்தில், கலை கலாசார பீடாதிபதி பேராசிரியர் கணேஸ் சுரேஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆய்வு மாநாட்டில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் பி. பிரதீபன் பங்குகொள்ளவிருக்கின்றார்.

இந்த ஆய்வுமாநாட்டின் சிறப்புரையை தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா நிகழ்த்தவுள்ளார்.

மாநாட்டின் ஆரம்ப வைபவம் நல்லையா மண்டபத்தில் மு.ப 09:00 - 11:00 வரை நடைபெறும், இதனையடுத்து கலை கலாசார பீடத்தின் ஆங்கில மொழிக் கற்கைகள் துறையில் மு.ப 11:00 – பி.ப 01:00, பி.ப 02:00 – பி.ப 03:30 வரை என இரு அமர்வுகளாக ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளின் முன்வைப்புகள் நடைபெறவுள்ளன.

இதனையடுத்து பி.ப 04:00 மணிக்கு எட்டாவது ஆய்வு மாநாட்டின் நிறைவு விழா நல்லையா மண்டபத்தில் நடைபெறும் இதில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்த ஆய்வாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்

No comments: