மட்டக்களப்பில் மீன்பிடித் துறையின் சவால்களுக்கு தீர்வு காண விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறைகள் எதிர்நோக்கும் சவால்களுக்கு உடனடியாகத் தீர்வு காணும் நோக்கில், மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுவின் இரண்டாவது அமர்வு நேற்று (13.08.2026) மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கலந்துகொண்டு, மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகள் தொடர்பில் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தார்.
கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், கடந்த 16.07.2025 அன்று நடைபெற்ற முதலாவது அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.
இதன்போது, அம்பிளாந்துறை, துறைநீலாவணை மற்றும் உறுகாமம் ஆகிய பகுதிகளில் மீனவர்களின் பயன்பாட்டிற்காக ஓய்வறைகள் அமைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கோரிக்கை முன்வைத்தார். இதற்கு அமைச்சர் தேவையான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
அதேபோன்று, குறுமண்வெளி – மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை – குருக்கள்மடம் ஆகிய பகுதிகளுக்கிடையில் படகுச் சேவை இடம்பெறும் இடங்களில், பயணிகள் மற்றும் மீனவர்களின் நலன் கருதி மலசலகூடத் தொகுதிகளை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் சிறிய குளங்களைத் தூர்வாரி, அவற்றில் மீன் வளர்ப்பை மேற்கொள்வதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் எனவும் சாணக்கியன் இராசமாணிக்கம் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் மீன்வளர்ப்புடன், குறித்த குளங்களைப் பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியும் என அவர் தெரிவித்தார். இதனை சாதகமாக பரிசீலிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.மேலும், மட்டக்களப்பு கல்லடி வாவிக்கு அருகில் அமைந்துள்ள ஐஸ் தொழிற்சாலையை மீளச் செயற்படுத்துவதன் மூலம் மீனவர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர், குறித்த ஐஸ் தொழிற்சாலையை குத்தகைக்கு வழங்குவதற்கான கோரல் எதிர்வரும் மாத இறுதிக்குள் இடம்பெறும் என தெரிவித்தார்.

உறுகாமம் இறங்குதுறைமுகம் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அமைச்சரிடம் விளக்கமளித்தார். இதன்போது, தற்போது இயங்கி வரும் உறுகாமம் இறங்குதுறைமுகம் தொடர்ந்து இயங்கும் எனவும், சாத்தியவள அறிக்கை பெறப்பட்ட பின்னர் மேலதிக இறங்குதுறைமுகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் பரிசீலிக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.மேலும், களுவன்கேணி, புன்னக்குடா மற்றும் தளவாய் பகுதிகளில் எதிர்வரும் வருடத்திற்குள் Beacon Lights அமைத்துத் தரப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட துறைசார் முக்கிய அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட துறைசார் முக்கிய அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
No comments: