News Just In

8/09/2026 08:28:00 PM

சமூக அமைப்பினால் கிராமிய மட்டத்தில் டெங்கு ஒழிப்புக்காக சிரமதானம்

சமூக அமைப்பினால் கிராமிய மட்டத்தில் டெங்கு ஒழிப்புக்காக சிரமதானம்

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

இலங்கையில் டெங்கு நோய் அதிகமாக பரவி வருவதை தடுக்கும் முகமாக தமது தன்னார்வத் தொண்டு சமூக அமைப்பு கிராமங்கள் தோறும் சிரமதான விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக உலகத்தன்மம் சமூக அமைப்பின் பிரதேச அமைப்பாளர் கே. கௌசலா தெரிவித்தார்.

அதனடிப்படையில் மட்டக்களப்பு போரதீவுப் பற்று, வெல்லாவெளிப் பிரதேசத்தில் உலகத்தன்மம் சமூக அமைப்பின் அனுசரணையில் கிராம பொது மக்களினதும் நிறுவனத் தொண்டர்களினதும் பங்குபற்றுதலுடன் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது.



இவ்வேளையில் மண்டூர் பிரதேச வைத்தியசாலையின் வளாகமும், சுற்றாடலும் துப்புரவு செய்யப்பட்டது.

தமது வீட்டையும், வீட்டுச் சூழலையும், கிராமங்களில் சேவை கிடைக்கப்பெறும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட இன்னும்பல இடங்களையும் துப்புரவாகப் பேணுவதில் பிரதேசப் பொதுமக்கள் கரிசனை காட்ட வேண்டும் என்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும் என்று உலகத் தன்மத் அமைப்பின் பிரதேசப் பொறுப்பாளர் கௌசலா குறிப்பிட்டார்.

No comments: