வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளால் மக்கள் தற்கொலை வரை செல்கின்றனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு பின்னால் யார்? விமான நிலைய டொலர் மாபியாவை விசாரிக்க வேண்டும்.
இன்றைய தினம் (07.08.2026) பாராளுமன்றத்தில் நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரிடம் நான் எழுப்பிய கேள்வி:
மாண்புமிகு சபாநாயகரே, தொழில்வாய்ப்புகள், வேலைவிசாக்கள் அல்லது ஐரோப்பிய நாடுகளுக்குக் குடிபெயர்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் எனப் போலி வாக்குறுதிகள் வழங்கி, அப்பாவி மக்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் மோசடி செய்யப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன.
இவ்வாறான மோசடிகள் தொடர்பாக ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் சில பதிவுசெய்யப்படாத அமைப்புகளால் மேற்கொள்ளப்படுகின்றன. அதேவேளை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட முகவரகங்கள் தொடர்பாகவும் பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், இந்தக் குற்றச்செயல்களை எதிர்கொள்வதற்கு ஒருங்கிணைக்கப்பட்டதும் விசேடமானதுமான சட்ட அமலாக்க நடவடிக்கை அவசியமாகியுள்ளது என்பது தெளிவாகிறது.
மேலும், தேவையான அனைத்து பயண ஆவணங்களுடனும் விமான நிலையத்திற்கு வந்த பின்னரும், சிலரின் விசாக்கள் அல்லது ஏனைய பயண ஆவணங்கள் மேலதிக சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற பெயரில் அவர்களின் பயணம் தடுக்கப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட தூதரகத்தின் உறுதிப்படுத்தலைப் பெற்றுவருமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், அதே அல்லது ஏறத்தாழ ஒத்த பயண ஆவணங்களைப் பயன்படுத்திய வேறு சிலர் மேலதிக பணம் செலுத்தியதன் பின்னர் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர் என்றும், பணம் செலுத்த மறுப்பவர்களுக்கு புறப்பாடு மறுக்கப்பட்டு, அவர்கள் கடுமையான நிதி இழப்புகளுக்கு உள்ளாகின்றனர் என்றும் பல பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இம்முறைப்பாடுகளைப் புலனாய்வு செய்வதற்கு எந்தவொரு தனிப்பட்ட அதிகார அமைப்பும் பொறுப்பேற்காத காரணத்தால், இலங்கை பொலிஸ், குற்றப்புலனாய்வுத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு இடையில் பாதிக்கப்பட்டவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
இந்த மோசடிகளால் ஏற்பட்ட கடுமையான நிதி மற்றும் உளவியல் பாதிப்புகளின் விளைவாக, தற்கொலை முயற்சிகளும், தற்கொலைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே, நான் அமைச்சரிடம் பின்வரும் கேள்விகளை முன்வைக்கின்றேன்:
(அ) வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி, விசா மோசடி, குடிவரவு மோசடிகள் மற்றும் மனிதக் கடத்தல் தொடர்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை பொலிஸாரால் பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை எவ்வளவு? அதனுடன் ஆரம்பிக்கப்பட்ட புலனாய்வுகள், மேற்கொள்ளப்பட்ட கைதுகள், தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், பெற்ற தண்டனைகள் மற்றும் இன்னும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை யாது?
(ஆ) கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடமிருந்து இலங்கை பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட முறைப்பாடுகள் அல்லது பரிந்துரைகளின் எண்ணிக்கை எவ்வளவு? அவற்றின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட புலனாய்வுகள், கைதுகள், வழக்குத் தொடரல்கள், பெற்ற தண்டனைகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றிய விபரங்கள் என்ன?
(இ) தேவையான அனைத்து பயண ஆவணங்களையும் வைத்திருந்தபோதிலும், விமான நிலையத்தில் வைத்து மேலதிக பணம் கோரப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனரா? அவ்வாறாயின், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் அதன் முடிவுகளும் யாவை?
(ஈ) இத்தகைய குற்றங்களுக்கு வசதி செய்து கொடுத்தது, உதவி புரிந்தது, தூண்டியது அல்லது அவற்றைத் தடுப்பதில் தவறியது தொடர்பாக ஏதேனும் அரசாங்க அதிகாரிகள் மீது விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளனவா அல்லது வழக்குகள் தொடரப்பட்டுள்ளனவா?
(உ) வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி, விசா மோசடி, குடிவரவு மோசடி மற்றும் மனிதக் கடத்தல் தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்கும் புலனாய்வு செய்வதற்கும் இலங்கை பொலிஸின் எந்தப் பிரிவு பொறுப்பாக உள்ளது? மேலும், பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கோ அல்லது ஒரு பொலிஸ் பிரிவிலிருந்து மற்றொரு பிரிவிற்கோ அலைக்கழிக்கப்படுவதைத் தடுப்பதற்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
(ஊ) இம்மோசடிகளின் விளைவாக தற்கொலைக்கு முயன்றவர்கள் அல்லது உயிரிழந்தவர்கள் தொடர்பான அறிக்கைகளை அரசாங்கம் பதிவுசெய்துள்ளதா அல்லது விசாரித்துள்ளதா? அவ்வாறாயின், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை?
(எ) இவ்வாறான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் வலைப்பின்னல்களை முறியடிப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மோசடியாகப் பெறப்பட்ட பணத்தை மீட்டெடுப்பதற்கும், மேலும் இத்தகைய குற்றங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கும் இலங்கை பொலிஸாரால் எடுக்கப்பட்டுள்ள மேலதிக நடவடிக்கைகள் யாவை?
மாண்புமிகு சபாநாயகரே, ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் எனக்கு 20-க்கும் அதிகமான முறைப்பாடுகள் நேரடியாக கிடைத்துள்ளன.
மனிதக் கடத்தல் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பிலும் பல பாதிக்கப்பட்டவர்கள் என்னை நேரடியாகச் சந்தித்து தங்களுடைய வேதனைகளைப் பகிர்ந்துள்ளனர்.
எனவே, இவ்வாறான முறைப்பாடுகளைப் பதிவு செய்து விரைவாக விசாரணை மேற்கொள்ளும் வகையில், ஒரு பிரத்தியேக தேசிய புலனாய்வு அலகு உடனடியாக நிறுவப்பட வேண்டும் என நான் அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றேன்.
அதுமட்டுமல்லாமல், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திலும், விமான நிலையத்திலும் "மேலதிக பரிசோதனை" என்ற பெயரில் டொலர் பணம் கோரும் பாரிய மாபியா ஒன்று செயற்பட்டு வருவதாக பல பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தை நான் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய பின்னர், நாடு முழுவதிலிருந்தும் பலர் என்னைத் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களையும் ஆதாரங்களையும் வழங்கியுள்ளனர்.
எனவே, இந்த மாபியா வலையமைப்பு தொடர்பில் சுயாதீனமான, விரிவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என நான் அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இதற்குப் பதிலளித்த பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்கள், "இந்த முறையற்ற செயற்பாடுகள் குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். இது தொடர்பான தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் இருப்பின் அவற்றை அதிகாரிகளிடம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கிடைக்கும் அனைத்து தகவல்களும் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்." என்று தெரிவித்தார்.

No comments: