News Just In

8/08/2026 03:38:00 PM

லங்கா சதொச விற்பனை நிலையத்தினால் 10 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச விற்பனை நிலையத்தினால் 10 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

லங்கா சதொச விற்பனை நிலையம் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

நுகர்வோரின் நன்மை கருதி இந்த விலைக் குறைப்பு சனிக்கிழமை 08.08.2026 முதல் அமுலாகும் வகையில் அமுலுக்கு வந்துள்ளதாக சதொச அறிவித்துள்ளது.

குறைக்கப்பட்ட புதிய விலை மாற்றத்தின்படி, வெள்ளைப்பூண்டு கிலோ ஒன்றின் விலை 699 ரூபாவிலிருந்து 649 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் 259 ரூபாவிலிருந்து 224 ரூபாவாகவும், உருளைக்கிழங்கு 259 ரூபாவிலிருந்து 239 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளைப் பச்சை அரிசி, சிகப்பு பச்சை அரிசி, உள்ளுர் வெள்ளை நாட்டரிசி, பாசிப்பயறு, கடலை, உளுந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது

No comments: