தேசியப் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல், நிறுவன முறைகேடுகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், சட்டவிரோதத் துப்பாக்கிகள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் குடிமக்கள் இரகசியமாக வீட்டிலிருந்தவாறே புகாரளிக்கக் கூடிய வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்பு அமைச்சகம், கட்டணமில்லா 118 தொலைபேசி வழி அல்லது 118.pubsec.gov.lk என்ற இணையதளத்தின் வழியாகப் பொதுமக்களின் புகார்களைப் பெறுவதற்காக 118 பொதுப் பாதுகாப்புச் சேவை மையத்தைத் தொடங்கியுள்ளது.
புதிதாகத் தொடங்கப்பட்ட 118 பொதுப் பாதுகாப்புச் சேவை மைய இணையதளம், குடிமக்கள் இலங்கை தேசியப் பாதுகாப்பு அமைப்புகளுக்கு நேரடியாகப் புகார்களை எளிதாகப் பதிவு செய்யவும், டிஜிட்டல் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவும் அனுமதிக்கிறது.
கட்டணமில்லா தொலைபேசி எண் ஊடாக இலங்கைக்குள் உள்ள எந்தத் தொலைபேசியிலிருந்தும் 118 என்ற பிரத்தியேக குறுங்குறியீட்டை அழைக்கலாம்.
இலங்கையின் அனைத்து பொலிஸ் நிலையங்கள், குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம், தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபை, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகம், சிவில் பாதுகாப்புத் திணைக்களம் என்பனவற்றின் நேரடி அணுகலை இதன் மூலம் பெறலாம்.
அவசரமான புகார்களை அமைச்சர், பிரதி அமைச்சர் அல்லது அமைச்சகச் செயலாளரிடம் நேரடியாகத் தெரிவிப்பதற்கான வாய்ப்புகளையும் இச்சேவை உள்ளடக்கியுள்ளது.
வீட்டிலிருந்தே பாதுகாப்பாகப் புகார்களைச் சமர்ப்பிக்கலாம், ஆனால், வேண்டுமென்றே தவறான தகவல்களை அளித்தால், அத்தகைய தவறான தகவல்களை அளித்த நபர், அல்லது நபர்கள் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

No comments: