News Just In

9/02/2026 06:51:00 AM

சர்ச்சையை கிளப்பியுள்ள அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் செயல் - இணையத்தில் பரவும் காணொளி..

சர்ச்சையை கிளப்பியுள்ள அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் செயல் - இணையத்தில் பரவும் காணொளி..


மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், புவிச்சரித்திரவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் (GSMB) மட்டக்களப்பு அலுவலகத்திற்குச் சென்று, அங்கே பணியாற்றும் தமிழ் அதிகாரி ஒருவரை மிரட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட அபிவிருத்தி குழுவின் முடிவிற்கமைய நூற்றுக்கணக்கான மண் அகழ்வு அனுமதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த அனுமதிகளைக் கோரி அலுவலகத்திற்குச் சென்ற தேரர், பணியகத்தின் பணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதிகாரியை மிரட்டிய காட்சி பதிவாகியுள்ளது. இந்தச் செயலுக்கு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

சட்டத்தை நிலைநாட்ட முயலும் அதிகாரியை அச்சுறுத்துவதை அவர்கள் கண்டித்துள்ளனர்.

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இவ்வாறான சர்ச்சைக்குரிய மற்றும் இனவாதப் போக்குடைய கருத்துகளை இதற்கு முன்னரும் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: