News Just In

10/18/2026 05:29:00 PM

மட்டக்களப்பில் பஸ்ஸில் இருந்து இறங்கிய பெண்ணுக்கு சில நொடிகளில் நேர்ந்த துயரம்!


மட்டக்களப்பில் பஸ்ஸில் இருந்து இறங்கிய பெண்ணுக்கு சில நொடிகளில் நேர்ந்த துயரம்!




மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு சந்தியில் பஸ்ஸில் இருந்து இறங்கி நடந்து சென்ற பெண்ணொருவர் திடீரென வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று (18) காலை வெல்லாவெளியில் இருந்து பெரியபோரதீவு நோக்கி இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்த பெண்ணொருவர், பெரியபோரதீவு சந்தியில் பஸ்ஸில் இருந்து இறங்கி நடந்து சென்றபோது திடீரென வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் மரவேரில் தடுக்கி விழுந்து உயிரிழந்தாரா, பஸ் மோதியதால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதனையடுத்து, உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளுக்காக குறித்த பஸ்ஸும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் தெளிவான தகவல்களைப் பெற முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: