News Just In

10/14/2026 01:11:00 PM

பரோபகார தனவந்தரின் நிதி உதவியுடன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் முதன் முறையாக இரத்த சுத்திகரிப்புப் பிரிவு ஆரம்பித்து வைப்பு.

பரோபகார தனவந்தரின் நிதி உதவியுடன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் முதன் முறையாக இரத்த சுத்திகரிப்புப் பிரிவு ஆரம்பித்து வைப்பு.



(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )

மட்டக்களப்பு – ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் நீண்ட காலக் தேவைப்பாடாக இருந்து வந்த இரத்த சுத்திகரிப்புப் பிரிவுக்கான வைத்திய உபகரணங்கள் இல்லாதிருந்த குறைபாடு தனவந்தரான பரோபகாரியின் சுமார் ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதி உதவியுடன் இப்பொழுது நிவர்த்திக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் புதனன்று (14) இரத்த சுத்திகரிப்புப் பிரிவு தட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர். முரளீஸ்வரானால் துவக்கி வைக்கப்பட்டு முதலாவது நோயாளிக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழத் தலைவரும் ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் முன்னாள் தலைவருமான எம்.எல். அப்துல் லத்தீபின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.எல். தாஹிறா சபியுதீன்இ மருத்துவ நிபுணர்கள், வைத்தியர்கள், பிரதேச செயலாளர், தாதியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் நன்கொடையாளர்கள், வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புதிய இரத்த சுத்திகரிப்புப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் இப்பிரதேசத்தில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்ளும், பிரதேசத்திற்கு பல்வேறு தேவைகள் நிமித்தம் வருகை தருவோரும் நன்மை அடைவர் என்று நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

No comments: