News Just In

10/13/2026 01:37:00 PM

மட்டக்களப்பில் 21.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் தபால் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு

மட்டக்களப்பில் 21.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் தபால் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு


(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )

மட்டக்களப்பு நாவற்காடு தபால் அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கிழக்கு மாகாணப் பிரதி அஞ்சல் மா அதிபர் எஸ். பிரகாஸ் தலைமையில் இடம்பெற்றது.

மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் கிருபாளினி அருட்செல்வன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நீண்டகாலமாக வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த நாவற்காடு தபால் அலுவலகத்திற்கு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கந்தசாமி பிரபுவின் தீவிர முயற்சியினால் 21.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது.

இதனையடுத்து புதிய கட்டட நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய கட்டடத்தை அமைப்பதற்கான காணியை நாவற்காடு சிறீசித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையினரும் நாவற்காடு முதியோர் சங்கத்தினரும் இணைந்து இலவசமாக வழங்கியுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

No comments: