(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
இனவெறுப்பை ஏற்படுத்தக் கூடிய கருத்;துக்களை முகநூலில் பதிவிட்டு வரும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரின் செயற்பாடுகளைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட நபருக்கெதிராக நிருவாக நடவடிக்கை எடுக்கக் வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இது விடயமாக கண்டனத்தைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரும் ஊடக சந்திப்பு புதன் (21) இரவு ஏறாவூர் நகரசபைத் தவிசாளர் எம்.எஸ். நழீம் தலைமையில் இடம்பெற்றது.
இந்த ஊடக தகவல் வெளிப்படுத்தல் சந்திப்பில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா ஏறாவூர்க் கிளையின் தலைவர் ஏ.எல். ஸாஜித்; ஹுஸைன், உட்பட ஏறாவூர் நகர சபையின் உறுப்பினர்கள், ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இங்கு தனது கண்டனத்தை வெளியிட்ட ஏறாவூர் நகரசபைத் தவிசாளர் நழீம், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் சமீப சில நாட்களாக தனது முகநூல் பதிவில் பதிவிட்டு வரும் கருத்துக்கள் நாட்டில் மற்றுமொரு இனக்கலவரத்தைத் தூண்டி விடுமோ என்ற அச்சம் சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இஸ்லாமிய வணக்க வழிபாட்டுக்காக பள்ளிவாசல்களில் ஒலிக்கப்படும் தொழுகைக்கான அழைப்பொலி பாங்கு பற்றியும், முஸ்லிம் சமூகத்தைப் பற்றியும், இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஆடைக் கலாசாரம் பற்றியும் மிகவும் கீழ்த்தரமான முறையில் இனவெறுப்பு மற்றும் மத நிந்தனை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயற்பட்டு வருகிறார்.
இவரது இந்தச் செயற்பாடுகள் ஏறாவூரில் காலங்காலமாக பரஸ்பர நட்புறவுடன் சகவாழ்வாகவும், அமைதியாகவும் வாழ்ந்து வரும் இஸ்லாமிய, ஹிந்து, கிறிஸ்தவ, பௌத்த சமூக மக்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனவாதமில்லாத சூழலைக் கட்டியெழுப்பி, மக்கள் மத்தியிலே நம்பிக்கையை ஏற்படுத்தி, அச்சமற்ற சூழ்நிலையை உருவாக்கி வரும் வேளையிலே இவ்வாறான ஒரு சில நபர்கள் பொது வெளியில் விதைக்கும் விஷமக் கருத்துக்கள் சமூகங்கள் மத்தியில் மீண்டுமொரு இனவாதத் தீயைப் பற்ற வைத்து விடுமோ என்ற அச்சம் எற்பட்டுள்ளது. எனவே இது விடயமாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.
இந்த விவகாரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா ஏறாவூர்க் கிளையின் தலைவர்ஸாஜித்; ஹுஸைன்,
இன நல்லிணக்கத்தின் முதுசமாய்த் திகழ்ந்து கொண்டிருக்கும் ஏறாவூரில் இனவாதத் தீ பற்ற வைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் நாம் இருக்கின்றோம். அதனால் இந்த விவகாரத்தை ஊடக வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றோம். ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனைத்து சமூக மக்களும் சிகிச்சை பெறுகின்றார்கள்.
அங்கு கடமை புரியும் வைத்திய அத்தியட்சகர் தனது முகநூல் பதிவில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். “நான் தற்சமயம் கடமை புரியும் பிரதேசத்தில் சுமார் 37 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அதிலிருந்து 5 வேளை அவர்கள் கூச்சலிட்டுக் கத்துகிறார்கள். இதனால் சிரமப்படுகிறேன். இதேபோல இப்பிரதேசத்திலுள்ள பெண்கள் தங்களை முழுமையாக மூடி மறைத்துக் கொண்டு வருகின்றார்கள். அவர்களது ஒரு மயிர் கூடத் வெளித் தெரிவதில்லை. இது என்ன மதம் இது என்ன சுதந்திரம்” என்று தனது இனவெறுப்பை பொது வெளியில் வெளிப்படுத்தி இருக்கின்றார்.
எல்லா சமூகத்தினருக்கும் சமத்துவமாக மனித உரிமைகள், அடிப்படை உரிமைகளைப் பேணி கடமை புரிய வேண்டிய ஒரு அரச அதிகாரி இவ்வாறு இன வெறுப்பு மன நிலையுடன் கடமை புரிவதோடு இன வெறுப்பைத் தூண்டும் வகையிலும் நடந்து கொள்வதையிட்டு நாங்கள் அச்சமடைகிறோம் எனவே இது குறித்து தாமதிக்காது நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றோம்.” என்றார்.
இந்த விவகாரத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட எல்லா பொதுநல அமைப்புக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கும் பாராளுமன்றத்தில் குரலெழுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: