இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அண்மைய பரிந்துரைகளைத் தொடர்ந்து, தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை, சுகாதார உதவியாளர்களின் சீருடை விதிமுறைகள் தொடர்பில் சுகாதார அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
கலாசார மற்றும் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை, தொழில்சார் தரநிலைகளையும் நோயாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதுடன், தேவையற்ற இன மற்றும் மத ரீதியான பதற்றங்களைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தையும் பேரவை வலியுறுத்துகிறது.
பாராளுமன்றத்தில் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விடுத்த அழைப்பிற்கமைய, அவர் அறிவித்த குழுவின் நியமனம், அதன் செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய சீருடை விதிமுறைகளை மீளாய்வு செய்வதற்கான காலவரையறை தொடர்பில் விளக்கம் கோரியுள்ளோம்.
நியாயமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான தீர்வொன்றை எட்டுவதற்கு எமது ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளோம். அதேவேளை, கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளும் பொறுப்பு அரசாங்கத்திடமே உள்ளது என்பதையும் வலியுறுத்துகிறோம்.
சாணக்கியன் இராசமாணிக்கம்
ஒருங்கிணைப்பாளர்
தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை

No comments: