News Just In

8/31/2026 09:39:00 AM

சிறப்புற நடந்தேறியவல்லாட்டமற்றும் கரம் விளையாட்டுகளின் சுற்றுபோட்டி!

சிறப்புற நடந்தேறியவல்லாட்டமற்றும் கரம் விளையாட்டுகளின் சுற்றுபோட்டி!


கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் உள்ளக விளையாட்டு கழகத்தால் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற மேற்படிசுற்றுப்போட்டி நிறைவு பெற்றது. பல்வேறு வயதுக்குப்பிரிவுகளில் நடைபெற்ற மேற்படிபோட்டிகளில் மூவினத்தையும் சேர்ந்த 344பேர் போட்டியிட்டனர் .7,9,11,13,15மற்றும் திறந்த போட்டிகளாகநடாத்தப்பட்ட வல்லாட்ட போட்டியின் மிக சிறந்த போட்டியாளராக செல்வி சுதர்சன் மதுரா தெரிவானார். இவருக்கு வெற்றிகிண்ணத்துடன் கதிரமலை சந்திரகாசன் அவர்களின் ஞாபகார்த்த கேடயம் மற்றும் பணப்பரிசும்வழங்கப்பட்டது.


நிகழ்வுக்கு முதன்மை அதிதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பணிப்பாளரும், மாவட்ட போதனா வைத்திய சாலை பணிப்பாளருமான Drஇராசரெத்தினம் முரளீஷ்வரன் தமதுஉரையில் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் கடந்த காலகல்வி செயற்பாடுகள் தொடர்பாக எடுத்துரைத்தார். கல்வி அபிவிருத்தி சங்கத்தால் அன்னாளில் நடாத்தப்பட்ட உயர்தரவகுப்பு மாணவர்களுக்கானஇலவச வகுப்பில் பங்கு கொண்டு பயன்பெற்றவன் என்பதால்நானும்EDSஇன்பழைய மாணவன் என்பதை பதிவு செய்கிறேன் எனவும்குறிப்பிட்டார்



பெருமளவில் சிறுவர்கள் வல்லாட்டசுற்று போட்டியில் பங்குபற்றி தமது திறன்களை வெளிப்படுத்தியது மிகச் சிறப்பானது இவர்களை இத்துறையில் ஈடுபடுத்திய பெற்றார்கள் பாராட்டுக்குரியவர்கள் எனவும் குறிப்பிட்டார்

No comments: