News Just In

8/28/2026 01:07:00 PM

மட்டக்களப்பில் சிறப்பான முறையில் ஆரம்பமான வல்லாட்ட (Chees)போட்டி!

மட்டக்களப்பில் சிறப்பான முறையில் ஆரம்பமான வல்லாட்ட (Chees)போட்டி!



கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (EDS)உள்ளக விளையாட்டு கழகம் நடாத்தும் வல்லாட்ட சுற்றுப்போட்டி இன்றுகோலாகலமாக ஆரம்பமானது.

மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்க சிவநேசராசா மண்டபத்தில் ஆரம்பமான நிகழ்வுக்கு அதிதிகளாக இலங்கை தமிழரசுக்கட்சியின்
தேசிய இளைஞர் அணித்தலைவர் கிருஷ்ணபிள்ளை சேயோன், கல்லடி உப்போடை, நொச்சுமுனை ஸ்ரீசித்தி விநாயகர் ஸ்ரீபேச்சியம்மன் ஆலய உபதலைவர் சீ. அரியரெத்தினம்கல்வி அபிவிருத்தி சங்க
ஸ்தாபகர் சி. தேவசிங்கன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

 கல்வி அபிவிருத்தி சங்க ஸ்தாபகர் நிகழ்வுக்கான அறிமுகவுரையை ஆற்றினார். 8000ஆண்டுகளுக்கு முன்னரே இவ்விளையாட்டு ஆரம்பமானதாக சான்றுகள் கூறுகின்றன. கீழடி, ஆதிச்ச நல்லூர் ஆகிய பகுதிகளில் கிடைக்கப்பெற்ற சதுரங்க காய்களின்மாதிரிகள் யானைதந்தத்தில் செய்யப்பட்டு காணப்பட்டன. இவற்றின் கால அளவு கி. மு. 905
ஆண்டுகள் என கண்டறியப் பட்டு உள்ளது.மேலும் இவ்விளையாட்டை சிறுவயதில் கற்பதன்மூலம் அவர்களின் நினைவாற்றல், சிந்திக்கும் திறன், திட்டமிடல் பண்பு என்பன அதிகரித்துஅவர்களின் பொறுமை மேம்பட்டுமன அழுத்தத்தில் இருந்து வெளியேறுவதாகவும்ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றது என்றார்.

இவ்வாறான வல்லாட்ட போட்டிகளை இனிவரும் ஆண்டுகளில் தாம்
நடாத்ததிட்டமிட்டுள்ளதுடன்இதற்கான பயிற்சிகளும் EDS இல்  முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

No comments: