நூருல் ஹுதா உமர்
அம்பாரை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் புதிய பிரதம பொறியியலாளராக, பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ் அவர்கள் பதவியுயர்வு பெற்று இன்று (04) வெள்ளிக்கிழமை அம்பாரை மாவட்ட அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
வீதி அபிவிருத்தி திணைக்களத்தில் கல்முனை பிராந்திய நிறைவேற்றுப் பொறியியலாளராகத் திறம்படச் சேவையாற்றி வந்த இவர், இலங்கை பொறியியலாளர் சேவையில் முதலாம் தரத்தைச் சேர்ந்த பொறியியலாளர் என்பதுடன் தனது திறமையான நிர்வாக ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்பு மிக்க பணியின் காரணமாக தற்பொழுது அம்பாரை மாவட்ட பிரதம பொறியியலாளராகப் பதவியுயர்த்தப் பட்டுள்ளார்.
இவரது தலைமையில் அம்பாரை மாவட்டத்தின் வீதி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் மேலும் புதிய பரிமாணத்தை எட்டி, பெருவெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: