News Just In

11/05/2025 03:57:00 PM

சாய்ந்தமருது மல்ஹறுஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய நிரந்தர அதிபராக ரிப்கா அன்ஸார் கல்வியமைச்சால் நியமனம்

சாய்ந்தமருது மல்ஹறுஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய நிரந்தர அதிபராக ரிப்கா அன்ஸார் கல்வியமைச்சால் நியமனம்


நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ மழ்ஹறுஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய அதிபராக அதிபர் தரம் இரண்டை சேர்ந்த எம்.சி. நஸ்லின் ரிப்கா அன்ஸார் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டு அதற்கான நியமன கடிதத்தை கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஹிலால் வித்தியாலய பிரதி அதிபராக நீண்ட காலம் கடமையாற்றிய இவர் சாய்ந்தமருது கமு/கமு/ மழ்ஹறுஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய பதில் அதிபராக கடமையாற்றி வந்த நிலையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் நிரந்தரமான அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமன கடிதத்தை வழங்கி வைக்கும் நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர்களான எம்.எச்.எம். ஜாபீர், ஏ. சஞ்சீவன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments: