கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந் தலால் ரத்ன சேகரவின் பணிப்புரைக்கமை ய மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் சுமார் 10 கோடி ரூபா செலவில் மாகாண கல் விஅமைச்சின் மேற்பார்வையில்கல்வி அபி விருத்தி திட்டங்கள் அமுல் நடத்தப்பட்டு வரு கின்றன.
இந்த பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ்பாடசாலைகளுக்கு தேவையான புதிய வகுப்பறை கட்டிடங்கள், மலசல கூட வசதி கள். விஞ்ஞான கூட வசதிகள், நூலகங்கள் மற்றும் விளையாட்டு மைதான அபிவிருத்தி பணிகள் தற்பொழுது திருப்திகரமாக நடை முறைப்படுத்தப்பட்டு வருவதாக தேசிய மக் கள் சக்தியின் மட்டக்களப்பு அமைப்பாளர் கே, திலகநாதன்தெரிவித்தார்.
இந்த விசேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு தன்னாமுனை யோசப் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட. புதிய வகுப்பறைக் கட்டிட தொகுதி ஆளுநர் ஜயந்தலால் ரத்ன சேகரவினால் வைபவ ரீதியாக நேற்று (0 4 )மாலை திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில்தேசிய மக்கள் சக்தியின் மட் டக்களப்பு அமைப்பாளரும் விவசாய ,கால் நடை அபிவிருத்தி, காணி மற்றும் நீர்ப் பாச ன அமைச்சி ]ன் இணைப்பாளருமானகே. திலக நாதன். மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர்.தினகரன் ரவி மற்றும் கல்வித் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் தேசி ய மக்கள் சக்தியின் ஏறாவூர்ப்பற்றி பிரதேச சபை உறுப்பினர்கள். பொதுமக்கள் என பல ரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய ஆளுநர் நந்தலால் ஜயசேகர. அடுத்த வருடம் புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட வு ள்ள கல்வித் திட்டத்தை சீராக அமுல் நடத் துவதற்கு சகல ஆசிரியர்களும்தயார் நிலை யில் இருப்பதுடன் அதற்கான பயிற்சி களை யும் முன்கூட்டியே பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
எதிர்கால சந்ததியினரை கல்வித்துறையில் வளர்ச்சி அடைய செய்வதன் மூலமே எதிர் காலத்தில் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக் கமுடியுமென்ற நோக்கிலேயே புதிய கல்வி சீர்திருத்தம் நாட்டில் அமுல் நடத்தப்பட வுள் ளது.இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக அமு ல் நடத்துவதற்கு ஆசிரிய சமுதாயத்துடன் பெற்றோர்களும் பூரண ஒத்துழைப்புகளை வழங்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்
No comments: