ஆசிய சந்தைகளில் இன்று காலை வர்த்தக நடவடிக்கைகளின் தொடக்கத்தின் போது எரிபொருளின் விலை சடுதியாக குறைவடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, பிரெண்ட் ரக கச்சா எண்ணெய்யின் விலை சுமார் 08.5 சதவீதம் குறைவடைந்து பீப்பாய் ஒன்றுக்கு 92 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.
WTI ரக கச்சா எண்ணெய்யின் விலையும் சுமார் 09 சதவீதம் குறைவடைந்து பீப்பாய் ஒன்றுக்கு 88.60 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்தியக் கிழக்கில் அதிகரித்த பதற்ற நிலை காரணமாக, கடந்த 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு நேற்றைய தினம் முதன்முறையாக உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சடுதியாக அதிகரித்திருந்தது.
இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது நேற்றையதினம்(09/03/2026) கச்சா எண்ணெய்யின் விலை 23 சதவீத அதிகரிப்பை பதிவு செய்ததோடு, பீப்பாய் ஒன்றுக்கு 114 அமெரிக்க டொலர்களாக அதன் விலை பதிவாகியிருந்தது.
இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்றைய தினம் “தற்போதைய போர் சூழல் மிக விரைவில் முடிவுக்கு வரும்” என்று முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பையடுத்து சடுதியாக அதிகரித்த எரிபொருளின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு ஆசிய சந்தைகளில் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: