News Just In

3/12/2026 05:35:00 PM

துபாய்க்கு இனி திரும்புவதாக இல்லை... வெளியேறத் தொடங்கியுள்ள வெளிநாட்டவர்கள்

துபாய்க்கு இனி திரும்புவதாக இல்லை... வெளியேறத் தொடங்கியுள்ள வெளிநாட்டவர்கள்



ஈரானில் இருந்து தொடர்ச்சியாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்படுவதால், துபாய் பாதுகாப்பற்ற இடமாக மாறுவதாக குறிப்பிட்டு வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் வெளியேற முடிவு செய்துள்ளனர்.

ஒரு காலத்தில் வரி இல்லாத சொர்க்கமாக இருந்த துபாய், உலகம் முழுவதிலுமிருந்து செல்வாக்கு மிக்கவர்களையும், வெப்பமான வானிலை மற்றும் குற்றமற்ற தெருக்களைத் தேடும் ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களையும் ஈர்த்திருக்கிறது.

ஆனால் தற்போது ஈரான் போரால் அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளது. தோராயமாக 240,000 பிரித்தானியர்கள் குடியிருக்கும் துபாய் மாகாணம், மத்திய கிழக்கில் அமெரிக்க நட்பு நாடுகளை ஈரான் தாக்குவதால், துபாய் மீது தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.

ஈரானின் மூன்றில் இரண்டு பங்கு ஏவுகணைகளுக்கு துபாய் இலக்காகி உள்ளது, புதன்கிழமை காலை மூன்று பெரிய குண்டுவெடிப்புகள் நகரத்தை உலுக்கியது 

சர்வதேச விமான நிலையம் சேதமடைந்துள்ளதுடன், நால்வர் காயங்கலுடன் தப்பியுள்ளனர். பாம் ஜுமேராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஃபேர்மாண்ட் ஹொட்டலும் ஈரானால் தாக்கப்பட்டது, Standard Chartered மற்றும் Citi வங்கி அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மோதல் தொடங்கிய சில நாட்களில் இதுவரை நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் வெளியேறிவிட்டனர்.



மேலும் எஞ்சியிருப்பவர்கள் மேலே பாயும் ஏவுகணைகள் பற்றிய வீடியோக்களை வெளியிட்டால் அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்றே எச்சரிக்கப்பட்டுள்ளது.

துபாயில் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு இல்லை, மேலும் நகரத்தின் 90 சதவீதத்தை உள்ளடக்கிய அதன் வெளிநாட்டினரைச் சார்ந்துள்ளது. ஈரான் துபாய் நகரத்தைத் தொடர்ந்து தாக்கி வருகிறது, இரண்டு வாரங்களில் 1,700 ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை அனுப்பியுள்ளது.

இருப்பினும் 90 சதவீதம் வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, ஏவுகணைகள் மற்றும் குண்டுவெடிப்புகள் காட்டும் வீடியோக்களை பரப்பியதற்காக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் 21 பேர்கள் மீது சைபர் குற்றச் சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தகவல் பரப்பும் எவராக இருந்தாலும் 2 வருடங்கள் சிறையும் 40,000 பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பு எச்சரித்துள்ளனர்

இந்த நிலையிலேயே, த்யாயில் குடியிருக்கும் வெளிநாட்டவர்கள் பலர், தாங்கள் இனி துபாய்க்கு திரும்ப வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

No comments: