News Just In

3/14/2026 07:13:00 AM

சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம்

சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம்


ஏவுகணை நகரம் என்று அழைக்கப்படும் ரகசிய இராணுவ சுரங்கப்பாதை தளத்தின் வீடியோ காட்சிகளை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் தீவிரமடையும் மோதல்

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டு இராணுவ தாக்குதலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரானும் விடாமல் இரு நாடுகளுக்கு எதிராக பதிலடி தாக்குதலை நடத்தி வருகின்றனர்

குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை(Strait of Hormuz) கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ஈரானிய படை, அப்பகுதி வழியாக வர்த்தக கப்பல்கள் கடந்து செல்ல தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

உலக எரிசக்தி விநியோகத்தில் 20% வர்த்தகம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறுவதால், உலக நாடுகளுக்கு இது மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையில் எரிசக்தி வர்த்தகத்தை ஈரான் தொடர்ந்து தடுத்து வந்தால் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய தாக்குதலை ஈரான் எதிர்கொள்ள வேண்டும் என அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்பை பலப்படுத்தும் ஈரான்

இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் தனது இராணுவ பலத்தை அதிகப்படுத்தும் நோக்கில், அப்பகுதியில் உயிரை மாய்த்துக் கொள்ளும் தரைப்படகுகளை(Su**ide Drone Boats) ஈரான் ராணுவம் அதிக அளவு நிலைநிறுத்தி வருகிறது.

மேலும் நிலத்திற்கு அடியில் ரகசியமாக கட்டியெழுப்பப்பட்டுள்ள மிசைல் சிட்டி(Missile City) என அழைக்கப்படும் ரகசிய ஆயுத கிடங்கு தளத்தின் வீடியோ காட்சிகளையும் ஈரான் அரசு தற்போது வெளிப்படுத்தியுள்ளது.


இந்த வீடியோவில், மிக நீண்ட சுரங்கப்பாதை ஒன்று காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த முழு சுரங்கப்பாதை முழுவதும், வரிசையாக கடற்படை ட்ரோன்கள், கடல் எதிர்ப்பு ஏவுகணைகள், கடல் கண்ணிவெடிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

No comments: