News Just In

3/09/2026 07:23:00 AM

தெரிவு செய்யப்பட்ட ஈரானின் புதிய உச்ச தலைவர்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

தெரிவு செய்யப்பட்ட ஈரானின் புதிய உச்ச தலைவர்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு



ஈரான் அரசாங்கத்தின் மேலும் பல முக்கியமான உயர்மட்ட உறுப்பினர்கள், மொஜ்தபா கமெனிக்கு தங்களின் ஆதரவை பொதுவாக அறிவித்துள்ளனர்.

ஈரானிய மக்களும் அதேபோல் ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஈரான் நாடாளுமன்றத்தின் தலைவர் Mohammad Baqer Qalibaf, Assembly of Experts எடுத்த முடிவு “துல்லியமானது” எனக் கூறி, மொஜ்தபா கமெனியியைப் பின்பற்றுவது ஈரானியர்களின் “தெளிவான மத மற்றும் தேசிய கடமை” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய பாதுகாப்பு உயர்குழுவின் செயலாளர் Ali Larijani, புதிய தலைவரைச் சுற்றி ஒற்றுமையாக நிற்குமாறு அழைப்பு விடுத்து, “தெளிவான முடிவை” எடுத்ததற்காக அந்தச் சபைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரானிய ஆட்சியின் ஆதரவாளர்கள் தங்கள் புதிய உச்ச தலைவரைக் கொண்டாட வீதிகளில் இறங்கினர்.

No comments: