News Just In

3/09/2026 07:18:00 AM

திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடுகிறார் ஸ்டாலின்

திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடுமுக்கிய தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடுகிறார் ஸ்டாலின்


கோட்டை வடிவ மாநாட்டு முகப்பு.


 ​திருச்சி மாவட்​டம் சிறுக​னூரில் இன்று (மார்ச் 9) திமுக மாநில மாநாடு நடை​பெறுகிறது. இந்த மாநாட்​டில், முக்​கிய தேர்​தல் வாக்​குறு​தி​களை அக்​கட்​சித் தலை​வரும், தமிழக முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட உள்​ளார்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்டு திமுக சார்​பில், ‘ஸ்​டா​லின் தொடரட்​டும், தமிழ்​நாடு வெல்​லட்​டும்’ என்ற தலைப்​பில் திருச்சி சிறுக​னூரில் தேர்​தல் அரசி​யல் மாநாடு இன்று நடை​பெற உள்​ளது. இதற்​காக திமுக முதன்​மைச் செய​லா​ள​ரும், அமைச்​சரு​மான கே.என்​.நேரு தலை​மை​யில் பிரம்​மாண்ட ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

இதுகுறித்து திமுக ஐ.டி. பிரிவு நிர்​வாகி​கள் கூறியது: சிறுக​னூர் மாநாட்​டுக்​காக 500 ஏக்​கரில் மாநாட்டு வளாகம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதில், 200 ஏக்​கரில் மாநாட்டு அரங்​க​மும், 240 அடி நீள பிரம்​மாண்ட மேடையும் பிரம்​மாண்ட எல்​இடி திரை​யும் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இதுத​விர, மாநாட்​டுத் திடலில் 168 இடங்​களில் எல்​இடி திரைகள் பொருத்​தப்​பட்​டுள்​ளன. கோட்டை வடி​வில் 1,000 அடி நீளத்​துக்கு பிரம்​மாண்ட முகப்பு அமைக்​கப்​பட்டு பெரி​யார், அண்​ணா, கருணாநி​தி, ஸ்டா​லின், உதயநிதி ஆகியோரது படங்​கள் இடம் பெற்​றுள்​ளன. மாநாட்​டில் 10 லட்​சம் பேர் பங்​கேற்​பார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

3.60 லட்​சம் நாற்​காலிகள் போடப்​பட்​டுள்​ளன. 48 நுழைவு​வா​யில்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. மாநாட்​டுக்கு வருவோருக்கு குடிநீர் பாட்​டில் அடங்​கிய பை வழங்​கப்​படு​கிறது. மேலும், மாநாட்டு திடலில் 4 லட்​சம் பேருக்கு உணவு வழங்​க​வும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது என தெரி​வித்​தனர்.

மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சென்​னை​யில் இருந்து தனி விமானத்​தில் இன்று திருச்சி வரு​கிறார். மாநாட்டு வளாகத்​தின் முகப்பில் உள்ள 100 அடி உயரகொடிக்​கம்​பத்​தில் கட்​சிக் கொடியை ஏற்​றுகிறார். மாநாட்டு அரங்​குக்​குள் காரில் நின்​ற​வாறு நிர்​வாகி​கள் அளிக்​கும் வரவேற்பை ஏற்​றுக் கொண்​ட​வாறே மாநாட்டு அரங்​குக்​குள் செல்​கிறார்.

அங்​கிருந்து 600 அடி நீள ரேம்​பில் நடந்து மேடைக்​குச் செல்​கிறார். 2021-ம் ஆண்டைப்போல இந்த மாநாட்​டிலும் முக்​கிய அறி​விப்​பு​களை முதல்​வர் வெளி​யிட உள்​ளார். இதில், 60 வயதைக் கடந்த மூத்த ஆண்​களுக்கு இலவச பேருந்து வசதி உள்​ளிட்ட அறி​விப்​பு​கள் இடம்பெறும் எனத் தெரி​கிறது.


மாநாட்டில் ‘ஸ்டாலின் அலை 2026’ (stalin wave 2026) என்ற பிரத்யேக ஹேஸ்டேக் இன்று காலை வெளியாக உள்ளது. இதனை எக்ஸ் தளம், பேஸ்​புக், இன்​ஸ்டா​கி​ராம் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​கள், சமூக ஊடகங்​களில் டிரென்ட் செய்​வதற்​காக பிரத்​யோக ‘வார் ரூம்’ மாநாடு அரங்​குக்கு பின்​னால் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​காக திமுக ஐடி விங்க் தொண்​டர்​கள் 500 பேர் நியமிக்​கப்​பட்​டு, அவர்​களுக்கு லேப்​டாப், கம்ப்​யூட்​டர் மற்​றும் இன்​டர் ​நெட் வசதி​கள் அங்கு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. மேலும் மாநாட்டை சமூக ஊடகங்​களில் நேரலை செய்​வதற்​காக மாவட்டம்தோறும் சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ள 1,000 பேரின் பக்​கங்களை பயன்​படுத்த ஐடி விங்க் ஏற்​பாடு செய்​துள்​ளது.

மாநாட்டு வளாகத்​தில் முக்கிய விருந்தினர்கள் அமர தனித்​தனி அரங்​கு​கள், உணவுக் கூடங்​கள் அமைக்​கப்​பட்​டுள்ளன. ரமலான் நோன்பு காலம் என்​ப​தால், முஸ்​லிம்​கள் தொழுகை நடத்த வசதி​யாக தனி அரங்கு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

10 மருத்​து​வக் குழு​, ஆம்​புலன்​ஸ்​கள், தீயணைப்பு வாக​னங்​கள் நிறுத்​தப்​பட்​டுள்​ளன. மாநாடு அரங்​கம் மற்​றும் வாக​னம் நிறுத்​தும் பகு​தி​களை கண்​காணிக்க சிசிடிவி கேம​ரா பொருத்​தப்​பட்​டுள்​ளன.

மாநாடுக்கு வரும் வாக​னங்​களை நிறுத்த 15 இடங்​கள் ஏற்படுத்தப்​பட்​டுள்​ளன. இந்த இடங்​களுக்கு செல்​வதற்​காக மேப்​புடன் கூடிய க்யூஆர் கோடு அனுப்​பப்​பட்​டுள்​ளது. இதனை செல்​போனில் ஸ்கேன் செய்​தால், வாகன நிறுத்​தும் இடங்கள் தெரியும்​. இதனால்​, போக்​கு​வரத்​து இடையூறின்​றி ​வாகனங்​கள் செல்​ல முடியும்​.

No comments: