News Just In

11/05/2025 10:55:00 AM

உயர்தர மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டம் ஆரம்பம்

உயர்தர மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டம் ஆரம்பம்




2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது தொகுதி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு தற்போது கோரியுள்ளது.

தகுதியுள்ள மாணவர்கள் நவம்பர் முதலாம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி வரை www.studentloans.mohe.gov.lk என்ற இணையதளம் ஊடாக விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட அரச அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் முற்றிலும் ஆங்கில வழியில் வழங்கப்படும் பட்டப் படிப்புகளைத் தொடர இந்த கடன் வழங்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் ஒரே அமர்வில் குறைந்தபட்சம் மூன்று சாதாரண சித்தி பெற்றிருக்க வேண்டும், அத்துடன் நவம்பர் முதலாம் திகதியன்று, 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூபா 15 இலட்சம் ரூபாய் (கற்கைநெறிக் கட்டணங்களுக்காக) கடனாக வழங்கப்படும்.

மேலும் வாழ்க்கைச் செலவுகளுக்காக ஆண்டுக்கு தலா 75,000 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும்.

இந்தக் கடன் வட்டியில்லாமல் வழங்கப்படும், மேலும் பட்டப்படிப்பு முடிந்த பிறகு ஒரு வருட சலுகை காலத்துடன் சேர்த்து, 12 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தலாம்.

இலங்கையின் பல முன்னணி தனியார் உயர்க்கல்வி நிறுவனங்கள் இந்தச் சேர்க்கையில் பங்கேற்கின்றன.

மேலதிக தகவல்களுக்கு, உயர்க்கல்வி அமைச்சின் இணையதளத்தில் பார்வையிடுமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments: