(அஸ்ஹர் இப்றாஹிம்)
காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன் அவர்களின் வழிகாட்டுதலில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாவடிப்பள்ளி அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் வரவுக்குறைவு, சிகையலங்காரம் மற்றும் ஒழுக்கம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கிராம மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவினர், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் , பாடசாலை ஒழுக்காற்றுக் குழு உறுப்பினர்கள் ,அதிபர்கள், ஆசிரியர்கள் ,மனித அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .
இதனை பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி மேன்பாட்டு உத்தியோகத்தர்கள் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments: