News Just In

8/25/2024 02:26:00 PM

தென்கிழக்குபல்கலைக்கழக சம்மாந்துறை வளாக மாணவர் விடுதியில் கழிவு நீர் முகாமைத்துவ கட்டமைப்பில் ஏற்பட்ட இடையூறை அவதானிக்க சுகாதார பிரிவினர் கள விஜயம்



(அஸ்ஹர் இப்றாஹிம்)

தென்கிழக்கு பல்கலைக்கழக சம்மாந்துறை வளாக மாணவர் விடுதியின் கழிவு நீர் முகாமைத்துவ கட்டமைப்பில் இடையூறு காணப்படுவதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸதீன் அவர்களுக்கு கிடைத்த முறைப்பாடு தொடர்பாக ஆராயுமுகமாக சம்மாந்துறை வைத்திய சுகாதார அதிகாரி டொக்டர் கள எஸ்.ஐ.எம்.கபீர் தலைமையிலான குழுவினர் விஜயமொன்றை( 23)மேற்கொண்டிருந்தனர்.

தென்கிழக்கு பல்கலைகழக சம்மாந்துறை வளாக உதவி பதிவாளர் ,வேலைத்தள பிரதானி, விடுதி பொறுப்பாளர் ,பொது சுகாதார பரிசோதகர்கள் இதன் போது கலந்து கொண்டு நிலமையினை ஆராய்ந்தனர்.

No comments: